நாகர்கோயில், செப்- 08,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் மத்யாஸ்வார்டு பகுதியில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மைய வளாகத்தில் அமைந்துள்ள உயர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு குஜராத்தை சேர்ந்த இம்ரான் கான் ( வயது 44), அல்லாஹான், கடியார் குஜராத் மாநிலத்தில் காவலராக பணிபுரிந்து வருவதாகவும், தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளதாகவும் தன்னுடைய வங்கி கணக்கிற்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டு மூலம் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் தவறுதலாக தன்னுடைய கணக்கிற்கு ரூபாய் 15,000 செலுத்தியதாக கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்ததின் அடிப்படையில் குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அளித்த தகவலின் படி தன்னுடைய வங்கி கணக்கை வங்கி அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர் தான் பலமுறை சைபர் கிரைம் போலீசாரிடம் தன்னுடைய வங்கி கணக்கினை விடுவித்தால் ரூ. 15000 த்தை தான் திருப்பி அளித்து விடுவதாகவும், தன்னுடைய மகளை கேரளாவில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் , தன்னக்கு கையிறுப்பு எதுவும் இல்லை என கோரி பல முறை முறையிட்டும் விடுவிக்காததால் தான் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு குஜராத்தில் இருந்து நேரில் வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரை இரண்டு நாட்கள் சந்திக்க முயலும்போதும் கூட அங்கு காவல் பணியில் ஈடுபட்ட காவலர்கள் அனுமதிக்காததால் இரண்டு நாட்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வாசலில் உணவின்றி காலை முதல் மாலை வரை அமர்ந்து இருந்தும் பார்க்க அனுமதிக்காததால் நேற்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனாவை நேரில் சந்தித்து முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் மனவிரக்த்தியில் தான் தற்கொலை செய்து கொள்வதற்காக இந்த செல்போன் டவர் மீது ஏறி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினார். சம்பவம் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மற்றும் நாகர்கோயில் நேசமணி நகர் ஆய்வாளர் இசக்கிராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இம்ரான்கானை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர் மீட்கப்பட்ட இம்ரான் கான் காவல்துறையினிடம் தன்னை இன்று மீட்டு விட்டீர்கள் ஆனால் நடவடிக்கை எடுக்காத பட்ச்சத்தில் தான் எந்த ரூபத்திலும் இன்று அல்லது நாளைக்குள் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் அதன் பிறகு ஆவது என்னுடைய வங்கி கணக்கில் உள்ள பணத்தையும் என்னுடைய உடலையும் தன்னுடைய மனைவி குழந்தைகளிடம் ஒப்படைக்கும் படி போலீசாரிடம் மனவேதனையுடன் தெரிவித்தார். சம்பவத்தால் அப்ப பகுதி முழுவதும் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. சம்பவம் குறித்து நேசமணி நகர் காவல் நிலைய ஆய்வாளர் இசக்கிராஜா விசாரணை நடத்தி வருகிறார்.