நாகர்கோயில் – செப்- 08,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் 10 இடங்களில் ரூ. 55.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணியினை நாகர்கோயில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆய்வு செய்தார்.
கோணம் தொழில்நுட்பக் கல்லூரி அருகில் இரண்டு நிழற்குடையும், கண்கார்டியா சர்ச் பால் பண்ணை அருகில் மற்றும் நீதிமன்ற சாலைகளில் பயணிகள் நிழல் கூடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் வீரானி ஆளூர், சுங்கான் கடை ஐயப்பா கல்லூரி, பயோனியார் குமாரசாமி கல்லூரி, வெட்டூர்ணிமடம் ஆதர்ஷ் பள்ளி மற்றும் வில்லியம் , பென்சாம் மருத்துவமனை ஆகிய பகுதிகளில் புதிய பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கான இடத்தினை நேற்று அதிகாரியுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளேன். இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர்கள் ஜவகர், செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி, மாமண்ற உறுப்பினர்கள் தங்க ராஜா,மேரி ஜெனட் விஜுலா மாநகராட்சி அதிகாரி ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.