ஈரோடு, செப். 7
ஈரோடு நந்தா பொறியி யல் கல்லூரியின் 24வது முத லாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமையில் நடைபெற்றது. நந்தா கல்வி அறக்கட்டளையின் உறுப்பினர் பானுமதி சண்மு கன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன் னாள் தமிழக காவல் துறை தலைவர்(டிஜிபி) சைலேந்திர பாபு கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது மாணவர்கள் நன் றாக கற்று கொள்வதற்கு தனது சிந்தனையை விரிவுப டுத்த வேண்டும். அவ்வாறான சிந்தனையை தூண்டுவதற்கு ஆயுதமாக தினந்தோறும் ஒரு மணி நேரம்
செய்தித்தாள்கள் உட்பட ஏதாவது ஒரு தகவல் களஞ்சியத்தினை தினந்தோ றும் நேரம் ஒதுக்கி, தவறாமல் ‘வாசித்தல்’ பழக்கத்தை அவசியம் மேற்கொள்ள வேண்டும். மாணவ-மாணவிகள் தங்களுக்கு உதவி செய்தவர்களையும், பெற்றோர்களை யும் என்றைக்கும் மறக்காமல் தங்களது இமைபோல் காத்துக்கொள்ள வேண்டும்.
இவ் வாறு அவர் பேசி னார்.
விழாவில் நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலாளர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவ னங்களின் செயலாளர்
திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி முனைவர் ஆறு முகம், நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் நிர்வாக அலுவ லர் வேலுசாமி ஆகி யோர் வாழ்த்தி பேசினர்.
முன்னதாக கல்லூ ரியின் முதல்வர் ரகுபதி வரவேற்றார். முடிவில், முதலாமாண்டு துறை தலை வர் நீலகண்டன் நன்றி
கூறினார்.