கிருஷ்ணகிரி செப். 6:
கிருஷ்ணகிரி அடுத்த வி.மாதேப்பள்ளி கூட்ரோட்டில் உள்ளது ஸ்ரீ மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இங்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் பள்ளியின் தாளாளர் வி.ஜெயராமன் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பின்னர் மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களது ஆசிரியர்களுக்கு “ஹேப்பி டீச்சர்ஸ் டே” என தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பின்னர் பள்ளியின் முதல்வர் எம்.எஸ்.தனுஜா ஜெயராமன் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிப்புகளை வழங்கினார். இந்த ஆசிரியர் தின விழா நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் பி.ஜெயராமன், கல்வியின் சிறப்பு குறித்தும், சமூக அக்கறையுடன் ஆசிரியர்களின் பங்களிப்பு குறித்தும், ஊக்கம் அளிக்கும் வகையில் பேசினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் மற்றும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். வட்டார அளவில் சிறந்த பள்ளியாக செயல்பட்டு வரும் ஸ்ரீ மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஏராளமான பெற்றோர்களும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.