வேலூர்_05
புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வழங்கப்படும் என்கிற ஒன்றிய அரசின் முடிவை கண்டித்து வேலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சத்துவாச்சாரி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழக வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் மற்றும் எழுத்தாளர் இ. தமிழ் தரணி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வி.இ. சிவக்குமார், மாவட்ட செயலாளர் உ. விஸ்வநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் கு.இளங்கோவன், க.சிகாமணி, மாவட்ட அமைப்பாளர் நெ.கி. சுப்பிரமணியன், மாவட்ட மகளிர் அணி தலைவர் ந. தேன்மொழி, மாவட்ட காப்பாளர்கள் ந.கலைமணி, ச.ஈஸ்வரி, சத்துவாச்சாரி இரா. கணேசன், மாநகர தலைவர் ந.
சந்திரசேகரன், மாநகர செயலாளர் அ.மொ.வீரமணி முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி தலைவர் பொ. தயாளன் வரவேற்றார். வேலூர் மாவட்ட மாணவரணி செயலாளர் அ.இ. மதிவதனி இணைப்புரை வழங்கினார். பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர. அன்பரசன் தொடக்க உரையாற்றினார். வேலூர் மாவட்ட காப்பாளர் வி. சடகோபன் ஆர்ப்பாட்ட உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக திமுக மாவட்ட அவைத் தலைவர் தி.அ. முகமது சகி, திமுக மாவட்ட செயலாளர் ஏ. பி. நந்தகுமார் எம்எல்ஏ, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் முகமது சயி, காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர் டீக்காராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் வேலூர் பிலிப், மதிமுக மாநகர செயலாளர் ஜி. கோபி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ். தயாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜி. லதா, மாவட்ட செயலாளர் தமமுக சித்திக் பாஷா மற்றும் பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். இதையடுத்து திராவிடர் கழக வேலூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு. சீனிவாசன் நன்றி கூறினார். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் தி.க.வைச் சேர்ந்த இ. தமிழ் தரணி வெகு விமரிசையாக செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டது.