கன்னியாகுமரி,செப்.4-
செயின்ட் ஜோசப் கலாசன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி சார்பில் வயநாடு நிவாரண நிதிக்காக ரூ. 2 லட்சத்து 37 ஆயிரம் வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி செயின்ட் ஜோசப் கலாசன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி சார்பில் வயநாடு நிவாரண நிதிக்காக ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்து 500 திரட்டப்பட்டது. நிவாரண தொகையை பள்ளியின் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழங்கினர்.
சேகரிக்கப்பட்ட தொகை, கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நேற்று முறைப்படி பள்ளி முதல்வர் அருட்தந்தை ஜின்ஸ் ஜோசப் மற்றும் நிறுவனர் அருட்தந்தை ராபின்சன் மூலம் ஒப்படைக்கப்பட்டது.
நிவாரண நிதி வழங்கிய பள்ளி பெற்றோர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, பள்ளி முதல்வர் அருட்தந்தை ஜின்ஸ் ஜோசப் நன்றியைத் தெரிவித்ததோடு, இந்த கூட்டு முயற்சியானது, சமூகப் பொறுப்புக்கான பள்ளி சமூகத்தின் அர்ப்பணிப்பையும், கடினமான காலங்களில் தேவைப்படுபவர்களுக்குத் துணையாக நிற்கும் அவர்களின் விருப்பத்தையும் பிரதிபலிக்கிறது என்று கூறினார்.