நாகர்கோவில் செப் 4
வருகிற 7-ம்தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.அதேபோல் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் வழக்கம்போல் 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு 15-ம் தேதி மாலையில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் விஜர்சனம் செய்யப்படுகிறது .
இவ்விழா தொடர்பாக நேற்று இந்து அமைப்பினருடன் கன்னியாகுமரி டி.எஸ்.பி.,மகேஷ் குமார் ஆலோசனை நடத்தினர் .அப்போது அரசு விதிமுறைகளின் படி விழாவை நடத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் இந்து மகாசபா மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் ,இந்து முன்னணி மாநில பேச்சாளர் அசோகன்,மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் ,ஒன்றிய பொறுப்பாளர்கள் செல்வன் ,சிவா சுரேஷ் ,சுபாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.