மயிலாடுதுறை மாவட்டத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்; பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மிஸ்டு கால் மூலம் உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டார்:-
பாஜக கட்சி விதிகளின்படி ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினர்களை கட்சியில் புதிதாக சேர்ப்பது வழக்கம். அந்த வகையில் கட்சித் தலைவர் நட்டா பாரத பிரதமர் நரேந்திர மோடியை கட்சியில் முதல் உறுப்பினராக இணைத்தார். அதேபோல, தமிழ்நாட்டின் முதல் உறுப்பினராக எச்.ராஜா கட்சியில் இணைந்தார். இதை தொடர்ந்து மாவட்ட அளவில் பாஜக தொண்டர்களை கட்சியில் உறுப்பினர்களாக இணைக்கும் பணி தீவிரமாக தொடங்கி உள்ளனர்.
அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. மயிலாடுதுறையில் மாவட்ட துணைத் தலைவர் மோடி கண்ணன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன், மாவட்ட பொதுச் செயலாளர் நாஞ்சில்பாலு, வாஞ்சிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மிஸ்டு கால் மூலம் கட்சியில் மீண்டும் உறுப்பினர்களாக 150 க்கும் மேற்பட்டோர் இணைந்து கொண்டனர்.