நாகர்கோவில் செப்- 03 ,
கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கீரிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ரப்பர் பால் வெட்டும் தொழில் முற்றிலுமாக முடங்கியது இதனால் தினசரி பல கோடி கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இன்றி தவிப்பு –
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை நிறைவடையும் காலத்தில் மழை தீவிரமடைந்துள்ளது குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக காளிகேசம் , கீரிப்பாறை , மாறாமலை , வாழயத்து வயல் , உள்ளிட்ட பகுதிகளில் அன்னாசி பழம் வாழை ரப்பர் விவசாயம் நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் 30 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் ரப்பர் விவசாயம் நடைபெற்று வருகிறது தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ரப்பர் மரங்களில் இருந்து பால் வெட்டும் தொழில் முற்றிலுமாக முடங்கியது . ரப்பர் மரங்களில் பாலை சேகரிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள குவளைகளில் மழை நீர் நிரம்பி உள்ளது . ரப்பர் பால் வெட்டும் தொழில் முற்றிலுமாக முடங்கியதால் தினசரி பலகோடி கணக்கில் அரசிற்க்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக தொழிலாளர்கள் யாரும் ரப்பர் தோட்டங்களுக்கு செல்லவில்லை சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வருவாய் இழந்து தவித்து வருகின்றனர். அந்நிய செலவாணியை ஈட்டி தரும் தொழிலில் முக்கியமானது ரப்பர் பால் வெட்டும் தொழில் என்பது குறிப்பிடத்தக்கது