நாகர்கோயில் – செப்- 02,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நாஞ்சில் கூட்டரங்கில் வைத்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களாக வழங்கி தெரிவித்தனர் மாவட்ட ஆட்சியர் துரை சார்ந்த அதிகாரிகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அப்போது நாம் தமிழர் கட்சியின் நாகர்கோயில் வடக்கு தொகுதி தலைவர் தனுஷ் குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இடலாக்குடி வழியாக செல்லும் (NH66) தேசிய நெடுஞ்சாலை பல மாதங்களாக பழுதடைந்து, புழுதி பறந்து, கற்க்கள் பெயர்ந்து மக்கள் பயணிக்க பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலை ( NH 66) ஐ செப்பனிட கோரி மனு எண் – 273, 05/08/2024 அன்று மனு வழங்கியிருந்தோம். எனினும் இன்று வரை அந்த சாலை செப்ப்பனிடபடாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் அலட்சியமாக இருந்து வரும் தேசிய நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து இடலாக்குடி சாலையில் நாற்று நட்டு போராட்டம் நடத்திட அனுமதி தருமாறு அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது. உடன் வடக்கு தொகுதி துணைத் தலைவர் ஆறுமுகம், இணை செயலாளர் சொக்கலிங்கம், கலை அரசு, பொருளாளர் ரெனே திலக் , மேற்க்கு தொகுதி தலைவர் ஜாண் , மெலிக்காண் , தெற்க்கு தொகுதி செயலாளர் விஜிலன் , மேற்க்கு தொகுதி துணை தலைவர் தினேஷ், சுரேஷ், ஜெனித் , கன்னியாகுமரி தொகுதி மார்க்கஸ் மற்றும் இனியன் உட்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.