கரூர் மாவட்டம் – செப்டம்பர் -3
கரூர் மாவட்டம் நெடுஞ்சாலை துறை மூலம் கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் குறுக்கே ஐந்து இடங்களில் பாலம் கட்டும் பணி நடைபெற்று முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மாயனூரில் கதவணை கட்டப்பட்டுள்ளது. இதில் விவசாயம் குடிநீர் தேவைக்காக புதுக்கோட்டை ,திருச்சி, தஞ்சாவூர், தென் மாவட்டங்களுக்கு கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் தென்கரை வாய்க்கால் வழியாக நீர் சென்றடைகிறது இந்த வாக்கல்களில் கரூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டம் மற்றும் கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை துறை உட்கோட்டம் பராமரிப்பில் உள்ள திருக்காம்புலியூர், கிருஷ்ணா ராயபுரம், பழைய ஜெயங்கொண்டம் செல்லும் சாலை, மகாதானபுரம் மயிலம்பட்டி சாலை ஆகியவற்றின் குறுக்கே செல்கிறது மேற்கூறிய சாலைகளில் வாய்க்காலின் குறுக்கே 1927 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமை வாய்ந்த பாலங்கள் இருந்தது பழமை வாய்ந்ததாகவும் அகலம் குறுகியதாகவும் சேதம் அடைந்தது காணப்பட்டது மேற்கண்ட சாலைகளில் பல கிராம மக்கள் இப்ப பாலங்கள் வழியாக பயணம் மேற்கொண்டனர் ஆகவே பொதுமக்களின் புதிய பாலம் வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையான இருந்து வந்தது கடந்தாண்டு உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் மேற்கண்ட இடங்களில் பாலம் கட்டுவது குறித்து குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் மூலம் கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் மூலம் முன்மொழிதல் செய்யப்பட்டது இதைத்தொடர்ந்து இப்பாளோ பணி கட்டுவதற்கான அரசாணை பெறப்பட்டு மேற்கூறிய ஐந்து இடங்களிலும் பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு தற்போது பாலத்தின் அணுகு சாலை அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.