இராமநாதபுரம் செப்03-
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பதவிவகிப்பவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வி துறை அனுமதி இல்லாமல் தலைமையாசிரியர் அனுமதியுடன் கல்வி தொடர்பில்லாத விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் கட்சியையும் தனிநபர்களை விளம்பர படுத்தும் நோக்கில் நடத்தப்படுகின்றன. இது மாணாக்கர்களின் பெற்றோர்கள் மத்தியில் பிரச்சனைகளை உருவாக்க வழி செய்கின்றனர்
வரும் ஆசிரியர் தினந்தன்று இது போன்று கல்வித்துறைக்கு தொடர்பில்லாத நபர்கள் மூலம் விழா நடைபெற இருப்பதாக தெரிய வருகின்றது. மாணாக்கர்களின் கல்விக்கு பயனளிக்காத எவ்வித விழாக்களும் நிகழ்ச்சிகளும் ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்த அனுமதிக்க கூடாது எனவும், மாவட்ட ஆட்சித் தலைவர்யிடம் முன் அனுமதி பெற்றுதான் விழா நடத்தவேண்டும் என்றும், தலைமையாசிரியர் முடிவில் விழா நடத்த கூடாது எனவும் கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் கரீம் கனி புகார் மனு அளித்துள்ளா