பூதப்பாண்டியில் ரூ. 27 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு புதிய
நியாய விலைக்கடை கட்டிடங்களை
தளவாய்சுந்தரம் எம் எல் ஏ திறந்து வைத்தார்
நாகர்கோவில் செப் 2
தோவாளை ஒன்றியத்திற்குட்பட்ட பூதப்பாண்டியில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2022 – 2023-ன் கீழ் திட்டுவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட பூதப்பாண்டி நியாயவிலைக் கடை எண் 1 மற்றும் எண் 2-க்கு ரூ. 27 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு பூதப்பாண்டி பேரூராட்சித் தலைவர் ஆலிவர்தாஸ் தலைமை வகித்தார். நியாயவிலைக்கடை கட்டிடங்களை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் திறந்து வைத்து பேசும் போது கூறியதாவது:-
இப்பகுதி மக்கள் நியாய விலைக்கடை எண் 1 மற்றும் எண் 2 இவற்றிற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்கள் பொது மக்களுக்கு தேவையான நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் நான் என்றும் தவறியதில்லை. மக்களின் குரலுக்கு மதிப்பளித்து அதனை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன் என தெரிவித்தார்.
இவ்விழாவில் பூதப்பாண்டி பேரூராட்சி வார்டு உறுப்பினர் உஷாபகவதி, பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்டுவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ராஜேஷ் வரவேற்று பேசினார். தோவாளை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சாந்தினி பகவதியப்பன், பூதப்பாண்டி பேரூராட்சி துணைத் தலைவர் அனில்குமார், பூதப்பாண்டி-திட்டுவிளை லயன் கிளப் செயலாளர் சுந்தர், தோவாளை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன்.சுந்தர்நாத், தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துக்குமார், பூதப்பாண்டி பேரூர் கழகச் செயலாளர் எபிஜாண்சன், பூதப்பாண்டி பேரூராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் ஜீவாகணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தேவாளை வடக்கு ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஏசுதாஸ் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கழக மகளிர் அணி துணைச் செயலாளர் ராணி, மாவட்ட கழக துணைச் செயலாளர் பார்வதி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜாராம், மாநகர தெற்கு பகுதி கழகச் செயலாளர் வழக்கறிஞர் முருகேஷ்வரன், வார்டு கவுன்சிலர்கள் மரிய அற்புதம், முருகன்பிள்ளை, ராபின், அசாரூதின், ஈஸ்வரி, யூஜின்பாபு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் பூதை மணிகண்டன், துணைச் செயலாளர் பூதை மகேஷ், தாழக்குடி பேரூர் கழகச் செயலாளர் பிரம்மநாயகம், தோவாளை வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சரவணன், சீதப்பால் கார்த்திகேயன், ஞாலம் ஜெகதீஸ், கழக நிர்வாகிகள் சுயம்புலிங்கம், ஞானதங்கராஜ், பொன்னம்மாள், ஜோசப் சந்திரசேகர், நவீன், ஷாகுல்அமீது உட்பட பலர் கலந்து கொண்டனர்.