சென்னை, செப்டம்பர்-02 ,
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி டாக்டர் சி .கே . கரியாலி எழுதிய ” மை மெட்ராஸ்” நூல் வெளியீட்டு விழா சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சி.பி .ராமசாமி ஐயர் பவுண்டேஷன் வளாகத்தில் நடைபெற்றது .
இந்நூல் வெளியீட்டு விழாவில் சி.பி. ராமசாமி ஐயர் பவுண்டேஷன் தலைவர் நந்திதா கிருஷ்ணன் வரவேற்புரையாற்றி ” மை மெட்ராஸ்” நூலை பற்றி குறிப்புகள் வழங்கினார். எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான டி.என் வாசுதேவன் நூலை வெளியிட தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் சிவ்தாஸ் மீனா முதல் பிரதியை பெற்றுக்கொண்டார் . மேலும் இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் ஜெயந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் வாசுதேவன்
“மை மெட்ராஸ்” நூலினை பற்றி கூறியதாவது:-
கரியாலி நிறைய புத்தகங்களை எழுதி இருக்கிறார் . இதில் குறிப்பாக மகளிர் மேம்பாடு,பெண்ணுரிமை பற்றி நிறைய உண்டு . இவருடைய நூல்களை வாசித்தப்
பின்பு தான் ஈக்விடாஸ் ஸ்மால் பைனானஸ் வங்கி தொடங்க எண்ணம் வந்தது . என்னை ஈர்த்த இவரை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்று ஆவலுடன் வந்ததேன். நான் சந்திக்க வந்த டிசம்பர் 31, 2007 அன்று தான் கரியாலி தமிழக ஆளுநர் மாளிகையின் கூடுதல் செயலாளாராக இருந்து ஓய்வு பெறுகிறார் . அன்று அவரை சந்திக்க இயலவில்லை . மறுநாள் 2008 புத்தாண்டு அன்று
சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது மறக்க முடியாத ஒரு நிகழ்வாகவே நான் கருதுகிறேன் என்றார்.
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவர் சிங்தாஸ் மீனா பேசியதாவது:-
இந்த ” மை மெட்ராஸ் ” நூலினை கையில் எடுக்கும் போது மெட்ராஸின் பாரம்பரியமான ஸ்பென்சர் கட்டிடம் நினைவுக்கு கொண்டு வருகிறது. மேலும் மதராஸின் பண்பாட்டு சின்னங்களாக விளங்கும் ஆன்மீக தலங்கள், நாட்டியம், கலை,பொழுதுபோக்கு இடங்கள் பற்றியும், மண் சார்ந்த மக்களைப் பற்றியும் தெளிவாக எடுத்து கூறியிருக்கிறார்.
இந் நூல் இன்றைய இளையவர்களுக்கு பழமையான மெட்ராஸ் பற்றி தெரிந்து கொள்ளும் கால சுவடாக விளங்கும் என்பதில் ஐயமில்லை என்றார்