தேனி ஆகஸ்ட் 31:
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மற்றும் சிலமலை சில்ல மரத்து பட்டி சங்கராபுரம் ஏரணம்பட்டி கீழ சிந்தலச்சேரி ராசிங்கபுரம் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் 6000 ஏக்கருக்கும் மேல் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வரை விவசாயிகளில் இருந்து மட்டை உரிக்கப்பட்ட தேங்காய் டன் ஒன்று ரூபாய் 23 ஆயிரம் முதல் 24,000 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர் தற்போது விழாக்காலம் தொடங்குவதாலும் திருமண முகூர்த்த விசேஷ நாட்கள் வருவதாலும் தேங்காய் வரத்து குறைந்திருப்பதாலும் டன் ஒன்றுக்கு 28000 முதல் 29 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது இந்த விலை உயர்வால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்