நாகர்கோவில் ஆக 29
குமரி மாவட்டம் கொட்டாரத்தில் மறைந்த முன்னாள் எம்.பி.வசந்தகுமார் 4வது நினைவு தினத்தை முன்னிட்டு கொட்டாரம் நகர காங்கிரஸ் சார்பில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கொட்டாரம் நகர காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார தலைவர் சாம்சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம் கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.பின்னர் ஹெச்.வசந்தகுமார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட ராஜீவ்காந்தி அறக்கட்டளை தலைவர் இசக்கிபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.