கூடலூர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கீழ கூடலூர் ஆறாவது வார்டு பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் நூதன ஆலய பிரதிஷ்ட மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
பல வருடங்களாக கால் அடைந்த நிலையில் கிடந்த காளியம்மன் திருக்கோவில் பூரண அமைப்பு மற்றும் திருக்கோவில் திருப்பணி நிறைவடைந்து. ( 28.08.2024)புதன்கிழமை காலை 9:00 மணி முதல் 9.30 மணிக்குள் விமானம் மற்றும் மூலஸ்தான மாஹ கும்பாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை தேவதா அனுக்ஞையாந்திரம் மற்றும் சூலாயுத பிரதிஷ்டை நடைபெற்றது.செவ்வாய்க்கிழமை யாஜமான சங்கல்பம்,விக்னேஸ்வர பூஜை, புண்ணிய யாகவாசனம், பஞ்சகாவிய பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, ம்ருத்சங் கிரஹணம், கோ பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து த்ரவ்யாஹூதி, முதற்கால பூர்ணாஹீதி தீபாராதனை,சோம கும்பபூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், திரவ்யாஹீதி, மஹா பூர்ணாஹீதி கடம் புறப்பாடு பல்வேறு பூஜைகளுக்குப் பின்பு கும்பாபிஷேக விழா நடைபெற்று புனித கலச நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. விழாவினைத் தொடர்ந்து மஹா அன்னதானம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவினை நடத்தியவர் சிவாகம ரத்தினம் சிவஸ்ரீ உமா மகேஸ்வர சிவாச்சாரியார் சுவாமிகள், கூடல் சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அர்ச்சகர்கள் நடத்தினர். இந்த கும்பாபிஷேக விழாவிற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய சமுதாய பொதுமக்களுக்கும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும், அனைத்துக் கட்சி பிரமுகர்களுக்கும், 6 தெரு வசூல் தாரிகளுக்கும் தலைவர் சுருளிவேல், செயலாளர் வெள்ளபாண்டி, துணைச் செயலாளர் சுருளிராஜ், பொருளாளர் ஜக்கன், கௌரவ தலைவர் சுருளி ஆகியோர் நன்றியினை தெரிவித்தனர். கும்பாபிஷேக விழா நடந்து கொண்டிருக்கும் பொழுது கருட பெருமாள் மூன்று முறை கோவில் வளாகத்தை சுற்றிய காட்சி அங்கு உள்ள பொதுமக்களை மனமுருக செய்தது.