திருமங்கலம் கல்லூரி மாணவ , மாணவியர்கள் இடையே நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் சார்பு நீதிபதி பங்கேற்பு
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாமில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய திருமங்கலம் சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் பேசுகையில்
தற்போது பாலியல் தொந்தரவில் சிக்கிய பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது காவல் நிலையத்தில் பெண் ஆய்வாளரை விசாரணைக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதே போன்று நீதிமன்றத்தில் பெண் நீதிபதியே அதற்கான விசாரணை நடத்துவார்கள். இந்த விசாரணை மூடிய நீதிமன்றத்திலேயே நடத்தப்படுவதால், பாலியல் தொந்தரவில் சிக்கிய பெண்கள் தனித்தன்மை பாதுகாக்கப்படும் என்பதுடன், இது குறித்த புகார் அளிக்க அஞ்சத் தேவை இல்லை என்று கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு விளக்க உரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து
வழக்கறிஞர்கள் சம்பத் வெண்மலர் லெட்சுமி ஆகியோர் பேசுகையில் கல்லூரி மாணவர்கள் பெண்கள் போன்று காதில் தோடு கையில் காப்பு என்ற வளையல் என தங்களை பெண்கள் போல பாவித்து கல்லூரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
மேலும் 2 சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் செல்வதை தவிர்க்கவும் 2 பேருக்கு மேல் வாகனங்களில் பயணிக்கவும் அதனால் விளையும் உயிரிழப்பு மற்றும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.