போடி ஆகஸ்ட் 29:
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகரமன்ற கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் . வி.ஷ ஜீவனா தலைமையில் பெண்கள் நலன் காக்கும் மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமில் முன்னதாக புற்றுநோய் விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து அவர் பேசும்போது இந்தியாவில் கருப்பை வாய் புற்றுநோயால் ஒரு மணிக்கு 7 இல்இருந்து 8, பெண்கள் வரை, உயிர் இழக்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் இவர்களில் 74000 பெண்கள் போதுமான அல்லது சரியான சிகிச்சை யின்றி இறந்து விடுகிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது எனவே பெண்கள் மார்பகத்தில் தோன்றும் கட்டிகளுள் 80% கட்டிகள் அல்ல என்றாலும் மார்பகத்தில் சிறிய கட்டி அது பற்றி பயமோ தயக்கமோ கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகி அந்தக் கட்டியின் தன்மை குறித்து உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது இந்த சுய பரிசோதனை செய்முறையானது மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க கூடியது அல்ல மாறாக அந்த நோயை ஆரம்ப நிலையிலே கண்டுபிடிக்க உதவக் கூடியதாகும் எனவே ஆண்டுக்கு ஒரு முறை மார்பக புற்றுநோய் குறித்து மருத்துவரை அணுகி மார்பக பரிசோதனை செய்து கொள்வது வருமுன் காப்போம் என்பது போல நல்ல விஷயமாகும் மேலும் 40 வயதை கடந்த பெண்கள் குறிப்பாக தாய் வழி சொந்தங்களில் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது மருத்துவரின் பரிந்துரைப்படி மேமோகிராபி ஊடுகதிர் செவியுனரா ஒலி அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்து கொள்வது நல்லது மேலும் மருத்துவரின் அனுமதியின்றி கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதையும் ஹார்மோன் சிகிச்சை மேற்கொள்ளுவதையும் தவிர்க்க வேண்டும் இதன்படி பெண்கள் பின்பற்றினால் தேனி மாவட்டத்தை புற்றுநோய் இல்லாத மாவட்டமாக உருவாக்க முன் முயற்சியாக இந்த முகாம் தொடக்கப்பட்டுள்ளது இந்த முகாமில் மார்பக புற்றுநோய் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உயர் ரத்த அழுத்தம் இரத்த பரிசோதனைகள் இசிஜி போன்ற பரிசோதனைகளை 30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களும் வருடம் ஒரு முறையாவது மேற்கொள்ள வேண்டும். மேலும் பெண்கள் மட்டும் இல்லாமல் ஆண்களும் வாய் பகுதியில் ஏற்படும் புற்றுநோய் புகையிலை பயன்படுத்துதல் புகைப்பிடித்தலில் இருந்து விடுபட தேவையான ஆலோசனைகள் போன்ற அனைத்து விதமான நோய்களுக்கான சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும் எனவே 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக மேற்கண்ட பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பேசினார். இந்த முகாமில் நகர்மன்ற தலைவிகள் போடிநாயக்கனூர் ராஜராஜேஸ்வரி சங்கர் கம்பம் வனிதா நெப்போலியன் சின்னமனூர் அய்யம்மாள் ராமு தேனி ரேணு பிரியா பாலமுருகன் பெரியகுளம் சுமிதா சிவக்குமார் நகராட்சி ஆணையாளர் கா .ராஜலட்சுமிகம்பம் புதுப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தரி பாஸ்கரன் பழனி செட்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் யோகா ஸ்ரீ தேவதானபட்டி பேரூராட்சி செயலாளர் ஆர்.விஜயா பெண் நலம் மருத்துவமனை புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் ஒருங்கிணைப்பாளர் செல்வி ஆரோக்கிய மேரி போடி சுப்புராஜ் நகர் மகளிர் சங்கத் தலைவி லட்சுமி மோகனசுந்தரம் உள்பட ஏராளமான பெண்கள் முகாமில்பங்கேற்று விழிப்புணர்வு அடைந்தனர் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் நன்றி கூறினார்