திருப்புவனம்
ஆக:29
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மேற்கு ஒன்றியம் பாஜக சார்பில் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம் ஒன்றிய தலைவர் ராஜா கதிரவன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு
மாவட்ட துணைத் தலைவர் சுரேஷ்குமார் மாவட்ட செயலாளர் மீனாதேவி ஆகியோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கையில் ஒன்றிய நிர்வாகி மற்றும் கிளை தலைவர்கள் ஒவ்வொரு கிராமமாக சென்று கிளை தலைவர்கள் ஒவ்வொரு பூத்திலும் குறைந்தபட்சம் 300 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் 2026 ஆம் ஆண்டு வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் ஒவ்வொரு கிளைத் தலைவரும் அவர்களது பகுதியில் உள்ள மக்கள் பிரச்சனைகளை கண்டறிந்து அதனை சரி செய்ய உதவ வேண்டும்
என்று அறிவுரை கூறினர்.
இக்கூட்டத்தில் பத்தாயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அப்போது பொறுப்பாளர்கள் பிரித்விராஜன் பாண்டியராஜன் சுகுமார் ஏ.டி. பாலன் சத்தியேந்திரன் ரஜினி பாலன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.