மதுரை ஆகஸ்ட் 28,
மதுரையில் தங்க மயில் வாகனத்தில் முருகப்பெருமான்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்ரமணியசாமி திருக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகையின் போது தங்கமயில் வாகனத்தில் எழுந்துருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். அதனடிப்படையில் கார்த்திகை அன்று முருகப்பெருமான் தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு வீதியுலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசித்தனர். கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.