ஈரோடு மாவட்டத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் மாணவர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கோயம்புத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளிலும் மற்றும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் மகத்தான திட்டமான “தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயின்ற அனைத்து மாணவர்களும் கலை மற்றும் அறிவியல், பண்பாடு, தொழில்நுட்பம், விவசாயம், செவிலியர், மருத்துவம் சார்ந்த படிப்புகள், சட்டம், பொறியியல், தொழிற்கல்வி சார்ந்த பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளில் இந்திய அரசு, தமிழ்நாடு அரசு. பல்கலைக் கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்தில் சுமார் 3.28 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசால் 2024-2025-ம் நிதியாண்டிற்கு ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து மாணவர்கள் பயன்பெற்றிட இணையதள வாயிலாக விண்ணப்பிக்க பிரத்தியேகமான தகவல் முகமை Portal https://umis.tn.gov.in) नका. விண்ணப்பிக்கும் மாணவருக்கு தனிப்பட்ட எண் (Unique ID) உருவாக்கப்பட்டு, மாணவரால் பதிவு செய்யப்பட்ட அலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அந்த எண்ணைக் கொண்டு விண்ணப்பங்களின் நிலையினை அறிந்து கொள்ள இயலும்.
மாணவர்களின் ஆதார் எண், பள்ளிக் கல்வித் துறையின் கல்வி மேலாண்மை
தகவல் அமைப்பு (EMIS) தரவுகள் மற்றும் உயர்கல்வி பயிலும் நிறுவனத்தில் பெற்ற
சேர்க்கை மற்றும் பல்கலைக்கழக மேலாண்மை தகவல் அமைப்பு (UMIS) ஆகிய
தரவுகளுடன் மாணவர்களின் விண்ணப்பம்ஒற்றைச் சாளர முறையில்
சரிபார்க்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களுக்கும் சமூக
நலத்துறையால் National Automated Clearing House வாயிலாக ரூ.1,000 உதவித் தொகை மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்யும் போதும், ஊக்கத் தொகை மாணவர்களின்
வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்த பின்னரும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட
அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
இத்திட்டத்தில் கலை மற்றும் அறிவியல், தொழிற்சார் படிப்புகள், இணை மருத்துவம் சார்ந்த படிப்புகள், பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி மற்றும் ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு (முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும்) போன்ற உயர்கல்வி படிப்புகள் படிக்கும் மாணவர்கள் பயன்பெறலாம். மேலும், எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு முடித்து தொழிற்பயிற்சி பயில்வோரும் இத்திட்டத்தின் மூலம்
பயன்பெறலாம். அதேபோன்று பிற மாநிலங்களில் ஒன்றிய
அரசின் கீழ் செயல்படும் IIT, NIT, IISER போன்ற தகைசால் கல்வி நிறுவனங்களில் பயிலும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 91 கல்லூரிகளில் பயிலும் சுமார் 9,012 மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் மாணவன் சிலம்பரசன் தெரிவித்ததாவது,
நான் ஈரோடு மாவட்டம் விநாயகர் கோவில் வீதி பாரதி நகர் மூலப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறேன். எனது தந்தை பெயர் பழனி, தாயார் பெயர் கண்ணம்மாள். இருவரும் கட்டிட வேலை செய்து வருகின்றனர். நான் சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியர் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறேன். என்னுடைய அண்ணன் ஈரோடு இன்ஜினியரிங் பில்டர்ஸ் அசோசியேஷன் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். எனது தம்பி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். எனது பெற்றோர் எங்களை மிகவும் சிரமப்பட்டு தான் படிக்க வைத்து வருகின்றனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எங்களை போன்ற ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களும் எவ்வித சிரமமுமின்றி உயர்கல்வியினை பயில வழிவகை செய்து, தமிழ்ப்புதல்வன் என்னும் திட்டத்தினை அறிவித்துள்ளார்கள். இத்திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1,000 பெற ஏதுவாக பற்று அட்டை வழங்கியுள்ளார்கள். இந்த மாதம் எனக்கு ரூ.1,000 எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட பணம் கல்லூரி படிப்பிற்கும் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இச்சிறப்பு திட்டத்தினை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாணவர்கள் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் மாணவன் சக்திவேல்
தெரிவித்ததாவது.
நான் ஈரோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம்., பிரிவில்
இரண்டாமாண்டு பயின்று வருகின்றேன். எனது தந்தை கார்த்தி. தாய் அனிதா.நாங்கள் திருப்பூர் மாவட்டம் அக்கரைபாளையத்தில் வசித்து வருகிறோம். எனது பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர். நான் 1-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்றேன். ஏழ்மை நிலையில் இருக்கும் எனது பெற்றோர் என்னை மிகவும் கஷ்டப்பட்டு தான் என்னை படிக்க வைத்தார்கள். தற்பொழுது தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் எனக்கு மாதந்தோறும்
ரூ.1,000 பெறுவதற்கான பற்று அட்டை வழங்கப்பட்டு, இந்த மாதம் எனது வங்கி
கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்தொகையானது என்னுடைய
உயர்கல்வி படிப்பிற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எங்களைப் போன்ற ஏழை,
எளிய குடும்பத்தை சார்ந்த மாணவர்களுக்கு உயர்கல்வியை எவ்வித
இடைநிற்றலுமின்றி தொடர வழிவகை செய்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு
மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என
தெரிவித்தார்.