மதுரை ஆகஸ்ட் 21,
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, பேரையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், தனது மகனின் கல்விக்கு உறுதுணையாக இருந்த எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஊதியம் பெறாமல் மராமத்துப் பணிகளை மேற்கொண்ட உத்தபுரத்தை சேர்ந்த கட்டிட பணியாளர் அழகு முருகன் அவர்களின் தன்னலம் கருதாத நெகிழ்வான செயலை பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர் மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி. வைஷ்ணவி பால் மற்றும் ஏழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பெருமக்கள் உள்ளனர்.