திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர்:ஆக:21, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தேசிங்கு ராஜன் தலைமையில் நடைபெற்றது. கண்டன உரையின்போது அனைவரையும் மாவட்ட செயலாளர் மூர்த்தி வரவேற்று பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் புஷ்பராஜ் முன்னிலையில் புஷ்பராஜ் முன்னிலையில் மாநில பொதுச் செயலாளர் ஜெயக்குமார் கண்டன உரை ஆற்றினார். இவரைத் தொடர்ந்து மாநில மகளிர் அணி செயலாளர் மதுரை கண்டனூரை நிகழ்த்தினார். கண்டன உரையின்போது: தேர்தல் கால வாக்குறுதியின் படி உடனடியாக ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திடவும், பகுதி நேர ஆசிரியர்களை ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாகவும், சம்பளம் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் விலை வருவதை சரி செய்யவும், தேர்வு பணிகளின் போது வழங்கப்படும் உழைப்பூதியத்தை இரு மடங்காக உயர்த்தியும், காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் உடனடியாக நிரப்பிடவும், ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான காலியிடங்களை நிரப்புவதோடு இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், இரவுக்கு காவலர் ஆகியவர்களை உடனடியாக பணி அமர்த்திடவும், அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான அடிப்படை சுகாதார வசதிகளையும் குறிப்பாக நவீன கழிப்பறை, குடிநீர் வசதி, காற்றோட்டமான வகுப்பறை, அமர்ந்து படிக்கக்கூடிய நூலக வசதி, ஆரோக்கியமான கேண்டின் வசதிகளை உடனடியாக செய்து தந்திடவும் என 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் துக்கன் நன்றியுரை வழங்கினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர் கழகத்தை சார்ந்த அனைத்து இருபால் ஆசிரியர்களும் பங்கேற்றனர்.