திருப்புவனம் :ஆக:21
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் பூவந்தி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் எனும் திட்டத்தை மானாமதுரை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் பூவந்தி ஊராட்சிமன்ற தலைவர் விஜயா ஆறுமுகம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
சிவகங்கை மாவட்டம் பூவந்தி ஊராட்சியில் மின்சாரம் மற்றும் வேளாண்மை மருத்துவம் ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட அரசுத்துறைகள் பங்குபெறும் மக்களை தேடி அரசு இயந்திரங்கள் செயல்படும் திட்டமான மக்களுடன் முதல்வர் எனும் மாபெரும் திட்டம் நடைபெற்றது.இதில் பூவந்தி மடப்புரம் கே.பெத்தானேந்தல் கணக்கன்குடி
பாப்பாகுடி லாடனேந்தல் செல்லப்பனேந்தல் கிளாதரி மணலுர் டி.வேலாங்குளம் ஏனாதி தேளி களுகேர்கடை உள்ளிட்ட ஊராட்சி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயாஆறுமுகம் சபர்மதி கோபிபாலபோதகுரு ராமேஸ்வரி முணியான்டி கவிதா முருகன் பஞ்சவர்ணம் ஆறுமுகம் குஞ்சரவள்ளி முத்துராமலிங்கம் மனோன்மணி ராமலட்சுமி அரசி முருகன் முனீஸ்வரன் நீலமேகம் ராஜேஷ் உள்ளிட்ட
ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் எழுத்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் திருப்புவனம் வட்டாட்சியர் அருள் பிரகாசம் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெறும் பகுதியில் கலந்து கொண்டு ஆய்வு செய்தார்.அப்போது பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டனர்.இந்த முகாமில் கலந்து கொண்ட அனைத்து பொதுமக்களுக்கும் மதிய உணவு ஏற்பாடுகளை பூவந்தி ஊராட்சி மன்றத் தலைவர் விஜயா ஆறுமுகம் சிறப்பாக செய்திருந்தார்.