மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் மழையினால் சேதம் அடைந்த முக்கிய சாலைகள் சீரமைக்கும் பணிகளை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ. சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார்,
நகர் தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மதுரை மாநகராட்சி பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையினால் மாநகரப் பகுதியில் உள்ள முக்கியமான சாலைகள் சேதம் அடைந்து போக்குவரத்துகும் பொது மக்களுக்கும் இடையூறாக இருந்து வருகிறது.
அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்ற வகையில் நகரில் முக்கிய சாலைகளை சீரமைக்க பொறியாளர்களுடன் ஆய்வு மேற் கொண்டனர். அந்த வகையில் மேல மாரட் வீதி மேலவெளி வீதி டி.பி.கே. ரோடு பெரியார் பேருந்து நிலையம் தமிழ்நாடு ஓட்டல் அருகே மேலவாசல் திடீர் நகர் பகுதி மேலவெளி வீதி குட்செட் தெரு பாலம் ஸ்டேஷன் ரோடு சிம்மக்கல் மீனாட்சி கல்லூரி பாலம் கோரிப்பாளையம் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைப் பகுதிகளில் சாலைகள் சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சி தலைவர், மாநகராட்சி ஆணையர் நகர் தலைமை பொறியாளர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது நகர் செயற் பொறியாளர்கள் பாக்கியலட்சுமி சேகர், உதவி செயற்பொறியாளர்கள் மயிலேரிநாதன், காமராஜ் உதவி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்