ஆக.19
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மக்கள் தளபதி ஐயா ஜிகே வாசன் எம்பி அவர்களின் ஆணைக்கிணங்க திருப்பூர் வடக்கு சட்டமன்றத்திற்கு உட்பட்ட சாமுண்டிபுரம் பேருந்து நிலையத்திலும், திருப்பூர் தெற்கு சட்டமன்றத்திற்கு உட்பட்ட காங்கேயம் ரோடு ராக்கியாபாளையம் பிரிவு சிக்னல் அருகில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் எஸ் .ரவிக்குமார் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாநில சிறப்பு அழைப்பாளர்கள் சிவசுப்பரமணியம்செழியன் MC, ஜெயா முத்துசாமி ex mc, மாநில கொள்கை பரப்பு செயலாளர் வீ.தனசேகரன் சிறுபான்மை பிரிவு கொங்கு மண்டல பொறுப்பாளர்
P.S.K. அபுல் கலாம் ஆசாத் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் படிவத்தை மாநகர் மாவட்ட பொது செயலாளர்கள் சே.பூபதி அவர்களும் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் படிவத்தை கே.ரகுநாதன் அவர்களும் பெற்றுக் கொண்டனர். நடைபெற்ற இந்த நிகழ்வின்போது மாவட்ட நிர்வாகிகள் ஈஸ்வரமூர்த்தி, முருகேஷ், சேதுராமன் மணிகண்டன், ராசு கருப்பையா,
சாம் அமிர்த பாபு, செல்வராஜ் டைலர் ரவி இளைஞர் அணி கோவிந்தராஜ் நஜ்முதீன், காளீஸ் மகளிர் அணி ஷர்மிளா கலாமணி டிவிஷன் தலைவர்கள் நடராஜ் கண்ணன் மாயழகு கீர்த்தி சுப்பிரமணி, பாபு பாலாஜி, கணேஷ், ஜோதிலிங்கம் சண்முகம் ஆபீஸ் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.