தேனி ஆகஸ்ட் 19:
தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி நகரில் அமைந்துள்ள நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம் சார்பில் நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் மருத்துவர் ஜெகதீஷ் முன்னுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கல்கத்தா ஆர் ஜீ சேகர் மருத்துவக் கல்லூரியில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதற்கு நியாயம் வேண்டும் குற்றத்தை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மருத்துவர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதோடு மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்களின் ஊர்வலம் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நட்டாத்தி நாடார் மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நட்டத்தி நாடார் மருத்துவமனை மேலாளர் சாந்தி நட்டாத்தி நாடார் மருத்துவமனை கருத்தரித்தல் மைய மேலாளர் எ பி ஜேம்ஸ் மக்கள் தொடர்பாளர் ஷேக் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.