மதுரை ஆகஸ்ட் 18,
நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யுவ பாரதி பள்ளி 2 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள்
கோவை, கேரளா மாநிலத்தில் உள்ள வயநாட் பகுதியில் நிலச்சரிவின் சீற்றத்தால் எண்ணற்ற உயிர்கள், தூக்கத்திலே உயிரோடு புதைந்து மாண்டுபோனதை அறிந்தும், உறவுகளை இழந்து எத்தனையோ உயிர்கள் போராடி கொண்டிருப்பதை அறிந்தும், சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை அமைப்பின் மூலம் கேரளாவில் மண் சரிந்த வயநாட் பகுதிக்கு கோவை மாவட்டத்தில் உள்ள யுவ பாரதி பப்ளிக் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் மற்றும் இப்பள்ளியில் பயிலும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து 2 லட்சம் மதிப்புள்ள அரிசி, சர்க்கரை, பருப்பு, பிஸ்கட், பிளாஸ்டிக் பொருட்கள், சில்வர் பிளேட் டம்ளர், சொட்டர் பெட்சீட் போர்வை தலையனை, குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள், ஆண்கள்
மற்றும் பெண்களுக்கு தேவையான அனைத்து ஆடைகள், நாப்கின், மல்லிகை பொருட்கள், அத்தியாவசிய அனைத்து பொருட்களும் சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை அமைப்பின் மூலம் தமிழ் நாட்டில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கண்டெய்னர் லாரியில் பொருள்களை ஏற்றி அமைப்பின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் ராஜ்குமார் தலைமையில் நிவாரண பொருட்களை வழங்கினர். மேலும் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் மகளிர் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட் களை களம் இறங்கி நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்று வழங்கி உள்ளார்கள்.