தருமபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்து காவல்துறை சார்பாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகளை பின்பற்றி பாதுகாப்புடன் பயணிப்பது மற்றும் சாலை விபத்துகளை குறைப்பது பற்றி விழிப்புணர்வு செய்தனர்.
குடிபோதையில் வாகனத்தை ஓட்டக் கூடாது. செல் போன் பேசிக்கொண்டும், வேகமாகவும் வாகனத்தை ஓட்டக் கூடாது. இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிந்து தான் வாகனத்தை ஓட்ட வேண்டும். ஓட்டுநர் உரிமம், வாகன ஆவணங்கள் சரியாக வைத்திருக்க வேண்டும். சாலை விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனத்தை ஓட்டக் கூடாது. மீறினால் பெற்றோருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று, போக்குவரத்து காவல்துறை சார்பாக காவல் உதவி ஆய்வாளர்கள் பாலமுருகன், வேலன், ராமகிருஷ்ணன், பெண் காவலர் பாத்திமா, உள்ளிட்டோர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகளை பின்பற்றி பாதுகாப்புடன் பயணிப்பது மற்றும் சாலை விபத்துகளை குறைப்பது பற்றி விழிப்புணர்வு செய்தனர்.