ஆம்பூர்:ஆக:18,
திருப்பத்தூர் மாவட்டம்
ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தாபுரம் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஓம் சக்தி ஆலயத்தில் மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சார்பாக ஸ்ரீ சக்தி சூலத்திற்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ஆராதனை செய்து 1008 போற்றி மந்திரங்கள் பாடி வழிபட்டனர்.
தீச்சட்டி ஏந்தி கோவிந்தாபுரம் கிராமத்தில் உள்ள ஓம் சக்தி கரக்கோவில், அருள்மிகு ஸ்ரீசிவசுப்பிரமணிய முருகர் ஆலயம், அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோயில், அருள்மிகு ஸ்ரீராமர் கரககோவில், அருள்மிகு ஸ்ரீஎல்லையம்மன் ஆலயம், அருள்மிகு ஸ்ரீ எட்டியம்மன் கோயில் உள்பட கோவிந்தாபுரம் ஊரிலுள்ள அனைத்து கோவில்களுக்கும் பம்பை மேலத்துடன் கஞ்சி அமுது, மற்றும் தீச்சட்டி ஏந்தி திருவீதி ஊர்வலம் சென்று ஒவ்வொரு கோவிலிலும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். ஓம் சக்தி ஆலயத்தில் அம்மனுக்கு தாலாட்டு பாடி பூஜை செய்தனர். முன்னதாக ஓம் சக்தி பக்தர்கள் காப்பு கட்டி 9 நாள் விரதம் பக்தியுடன் பூஜை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில்
கோவிந்தபுரம் ஓம் சக்தி வார வழிபாடு மன்றம் தலைவர் குருசக்திகள் கே. கேசவன் ஜெய் ஆறுமுகம் நவநீதம் சி.கந்தசாமி, ஏ.சிவலிங்கம்.ஆர். தஷ்ணாமூர்த்தி, உமாராணி,ஜோதி, விஜயா, மைதிலி, சக்திலட்சுமி குரு சக்தி.ரேவதி உள்ளிட்ட ஏராளமான சக்திகள் கலந்து கொண்டு அம்மனுக்கு கஞ்சி அமுது மற்றும் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செய்து வழிபட்டனர்.
ஓம் சக்தி ஆலயத்தில் மகா அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான தாய்மார்கள், பெரியோர்கள்,
இளைஞர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிந்தாபுரம் ஓம் சக்தி வார வழிபாட்டு மன்றம் செய்து இருந்தது.