சென்னை, ஆகஸ்ட்-,18,
சென்னை வட்டார பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை அலுவலகத்தில் நாட்டின் 78வது சுதந்திர தின விழா கொண்டாட பட்டது . இதில் பொது மேலாளர் மற்றும் வங்கி அலுவலக ஊழியர்கள், அதிகாரி பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர் பர்மிந்தர் சிங் தேசிய கொடியை ஏற்றி நிகழ்ச்சியை துவக்சி வைத்தார்.
மேலும் மேலும்விழாவில் அவர் பேசியதாவது:-
நம் நாடு சுதந்திரம் பெற்று 78 வது ஆண்டு விழாவை கொண்டாடும் நிலையில், இன்று.தனிமனித பொருளாதாரத்தில் சிறந்து விளங்கிவருகிறோம்.
சுதந்திரம் என்பது ஒவ்வொரு தனிமனிதரின் ஒட்டுமொத்த பங்களிப்பின் விளைவாகும். சமுதாயத்தின் சிறப்பிற்காக நாம் மேலும் பங்களிப்பை அளிக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தன்று சமூக அக்கரையுடன் நலதிட்டங்களை அளிப்பதை பாரத ஸ்டேட் வங்கி வழக்கமாக கொண்டுள்ளது.
இந்த ஆண்டு நுங்கம்பாக்கத்தின் எஃப் -3 காவல் நிலையத்திற்கு பாதுகாப்பிற்கான பேரிகார்டு தடுப்புகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது என்று அவர் தெரிவித்தார்.