தேனி ஆகஸ்ட் 18:
தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்கள் அதன் விவரம் சைபர் கிரைம் குற்றவாளிகள் ஆன்லைன் டிரேடிங் செயலிகள் மூலம் முதலீடு செய்யும் பணத்திற்கு இரு மடங்கு பணம் கிடைக்கும் என நூதன முறையில் குறுஞ்செய்தி மூலம் லிங்க் அனுப்புகிறார்கள் அந்த லிங்கை பொதுமக்கள் தொடுவதால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் திருடப்படும் விஞ்ஞான உலகத்தில் ஸ்மார்ட் போன் அதிகரித்து வரும் இந்த நிலையில் விஞ்ஞான வளர்ச்சிகள் வளர்ந்து இருந்தாலும் அதன் மூலம் உழைக்காமல் எப்படி சாப்பிடுவது என்று யோசித்து திருடும் கும்பல் இதுபோல் செயல்படுகின்றன எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இவ்வாறு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்