ராமநாதபுரம், ஆக.17-
ராமநாதபுரம் தேவிபட்டினம் ரோட்டில் அமைந்துள்ள கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் 11 ஆம் ஆண்டு விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டு விழா நிகழ்ச்சியில் ராமநாதபுரம் உச்சிப்புளி அருகே அமைந்துள்ள இந்திய கடற்படை ஐஎன்எஸ் பருந்து விமான தளத்தின் கமெண்டிங் ஆபிஸர் கேப்டன் அர்ஜுன் மேனன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவில் பள்ளித் தாளாளர் பொறியாளர் ஜீவலதா தலைமை வகித்தார். செயல் இயக்குனர் சௌந்தர்யா முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் டாக்டர் முத்துக்குமார் வரவேற்புரை ஆற்றி விளையாட்டு அணிகளை அறிமுகம் செய்து வைத்தார். தேசிய கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர் வருமான வரித்துறை உதவி அதிகாரி சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வியுடன் விளையாட்டு முக்கியத்துவத்தின் அவசியம் குறித்தும் விளையாட்டு இருந்தால் ஒழுக்கம் தானாக வந்துவிடும் என்றும் விளையாட்டு வீரர்கள் அரசு துறைகளில் சாதனை புரிய வாய்ப்புகள் கொட்டி உள்ளது குறித்தும் விளக்கி பேசினார். பள்ளி மாணவ மாணவிகளின் ர
அணி வகுப்பு மரியாதையும் மாணவ மாணவிகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிட்டு சாதனை புரிந்த மாணவ மாணவிகளுக்கு முதன்மை விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.