ஈரோடு ஆக 13
ஈரோடு மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் சிறுபாலங்கள் மற்றும் பாலங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பருவமழையையொட்டி ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் பாலங்களை பராமரிப்பு செய்வது வழக்கம். அதன்படி நடப்பாண்டில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவுப்படி பருவமழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பெருந்துறை தாலுக்காவில் நெடுஞ்சாலைகளில் நீர்வழிப்பாதையில் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் பெரிய பாலங்களில் நீர்வழிப் பாதையினை சுத்தம் செய்து பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோபி கோட்டம் உட்கோட்ட பராமரிப்பில் உள்ள பெருந்துறையிலிருந்து குளத்தான்வலசு வழியாக காஞ்சிக்கோயில் செல்லும் சாலையில் சிறுபாலத்தில் படர்ந்து கிடந்த செடி, கொடிகள் வெட்டி அகற்றப்பட்டு நீர்வழிப்பாதை சுத்தம் செய்யப்பட்டுள்ளது.