சென்னை, ஆகஸ்ட், 13
சீஸ் என்னும் பாலாடைக்கட்டி மேற்கத்திய நாடுகளில் தினந்தோறும் உணவில் பயன்படுத்தப்படும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் திட உணவுப்பொருளாகும்.
எந்த ஒரு எளிய உணவு வகைகளையும் செறிவூட்டி உண்பவருக்கு மனநிறைவை அளித்து மகிழ வைப்பதோடு, ஊட்டச்சத்தையும், பல்வேறு நன்மைகளையும் வழங்கும் உணவு மூலப்பொருளாக இது விளங்குகிறது.
அதன் இந்த ஒரு தனித்துவமான தன்மையை தழுவி, பிரிட்டானியா “தி லாஃபிங் கவ் சீஸ் ” பிராண்ட், அனைத்து வயதை சேர்ந்த சீஸ் ஆர்வலர்களுக்குமான “சீஸ் இட் அப்டாட் இன் ” மையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மைண்ட் ஷேர் மற்றும் டைம்ஸ் நெட்ஒர்க் ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் மூலம் முறைப்படுத்தப்பட்ட இந்த டிஜிட்டல் ஹப், சீஸ் ஆர்வலர்களுக்கான ஒரு சமூகத்தை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. பல்வேறு வகையான சீஸ் உணவு வகைகள், பற்றிய பரந்த அளவிலான தகவல்கள் ,வீடியோக்கள், வலைப்பதிவுகள் மற்றும் இன்னும் பலவற்றின் மூலமாக வழங்குகிறது.
இந்த “சீஸ்இட் அப்டாட் இன் ” மையமானது “பிரிட்டானியா தி லாஃபிங் கவ் சீஸ் ” வழங்கும் பல்வேறு வகையான சீஸ்களை நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவோடு ஒன்றிணைத்து, அதன் ருசியை மென்மேலும் அதிகரிக்கச் செய்து, எளிதாக மற்றும் நொறுக்குத் தீனியாக பயன்படுத்தப்படக்கூடிய உணவு வகைகளை வழங்குகிறது.
பிரிட்டானியா பெல் ஃபுட்ஸ் தலைமைச் செயல் அலுவலர் அபிஷேக் சின்ஹா கூறியதாவது:- “சீஸ் இட் அப் டாட் இன் ” என்பது “பிரிட்டானியா தி லாஃபிங் கவ் சீஸ்” தயாரிப்பு வகைகள் அனைத்தையும் குறித்து அறிந்து கொள்ள தொடர்ந்து ஆர்வம் காட்டிவரும் அனைத்து சீஸ் ஆர்வலர்களுக்கும், புதிதாய் அறிமுகம் ஆகும் ஆர்வலர்களுக்குமான ஒரு முன் முயற்சியாகும். பிரிட்டானியா மற்றும் பெல் குழுவிற்கு இடையேயான கூட்டாண்மைக்குப் பிறகு, பிரெஞ்சு கூட்டு நிறுவனத்திடமிருந்து, பெற்ற அறிவு மற்றும் நிபுணத்துவத்தின் மூலம், இந்தப் பிரிவின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் பயணத்தை நாங்கள் தொடங்கினோம். இந்தியாவில் ஒரு புதிய வகைப் பிரிவாக, சீஸ் மற்றும் ,அதன் நன்மைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வு போதுமான அளவில் இல்லாது இன்னும் குறைவாகவாகவும் மற்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தொடர்பில்லாமல் பரவி கிடப்பதையும் நாங்கள் உணர்ந்தோம். இந்த இடைவெளியை பூர்த்தி செய்து அனைத்து இந்தியர்களுக்கும் சேவை வழங்கும் பொருட்டு, எங்கள் கூட்டாளிகளான டைம்ஸ் நெட்வொர்க் மற்றும் மைண்ட்ஷேர் ஆகியோருடன் இணைந்து இந்த சவாலை எதிர்கொண்ட நாங்கள், அனைவரையும் உள்ளடக்கிய “சீஸ் இட் அப் டாட் காம் ” இயங்குதளத்தை கட்டமைத்து உருவாக்கினோம் என்றார்.