நாகர்கோவில் ஆக 13
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் சாதுசுந்தர் (49). தொழிலாளி. இவர் தற்போது, கோட்டார் இசங்கன்விளை பகுதியில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று சுமார் 3 வயது பெண் குழந்தை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தது. அந்த குழந்தையை கொஞ்சுவது போல் நடித்து, மிட்டாய் வாங்கி தருவதாக கடைக்கு தூக்கி சென்ற சாதுசுந்தர் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து அறிந்ததும் குழந்தையின் தாயார் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சாது சுந்தரை தேடி சென்ற போது அவர் தலைமறைவாகி இருந்தார். இதையடுத்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் ஆஷா ஜவகர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தையின் தாயாரின் புகாரின் பேரில், சாது சுந்தர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.