கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பெ.தங்கதுரை ஆகியோர் முன்னிலையில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை பள்ளி மாணவர்கள் எடுத்துக்கொண்டனர்.
சென்னை பல்கலைக்கழகத்தில்,நடைபெற்ற “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியினை வாசிக்க, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்ட காணொளி காட்சி வாயிலாக நேரடி ஒளிப்பரப்பு நிகழ்ச்சியில்,
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பெ.தங்கதுரை ஆகியோர் முன்னிலையில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை பள்ளி மாணவர்கள் எடுத்துக்கொண்டனர்.
போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியான,
“போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.
போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன்” என்று உளமார உறுதிகூறுகிறேன் என்ற உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையர் (ஆயம்) .குமரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் .கே.பி.மகேஸ்வரி, கிருஷ்ணகிரி நகரமன்ற தலைவர் .பரிதா நவாப், நகரமன்ற துணைத் தலைவர் .சாவித்திரி கடலரசுமூர்த்தி, துணை காவல் கண்காணிப்பாளர்கள் .தமிழரசி, .ரவிக்குமார் மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை (பொ), பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் .நவாப், பள்ளி தலைமையாசிரியர் .ரமேஷ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் .சர்தார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் .வெங்கடேசன், துணை ஆய்வாளர் .சுதாகர் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.