மதுரை மாவட்டம்
திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகளின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
காந்திசிலை அருகிலுள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதிதாக பொருப்பேற்ற மதுரை தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் எம்.துரைப்பாண்டி தலைமை வகித்து திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளை கட்சியினருக்கு அறிமுகம் செய்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். அதன் பின்னர் இக்கூட்டத்தில் கட்சியின் உயர்மட்ட ஆலோசனை குழுவின் தலைவர் முன்னாள் எம்.பி. என்.எஸ்.வி.சித்தன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பல்வேறு முக்கிய ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது மாநில செயலாளர் சிவசுந்தரம்
மற்றும் மாநில நிர்வாகிகள் ஸ்ரீதர்,துரைநாகராஜ்.துரைராஜ் கல்லம்பல் மாணிக்கவாசகம்,ஏர்போர்ட் மலைச்சாமி
மணிகண்டபிரபு இளைஞரணி நிர்வாகிகள்
நாக,மலைச்சாமி கொடிகாத்தகுமரன் மாநில செயலாளர் மற்றும் நகர,வட்டார நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.