மதுரை ஆகஸ்ட் 10,
மதுரை, தமிழ்நாடு முதலமைச்சர் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் “தமிழ்ப் புதல்வன்” திட்டத்தை தொடங்கி வைத்தார்கள் அதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் மதுரைக் கல்லூரியில் உயர் கல்வி பயிலும் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி (தமிழ்வழி) மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்கான வங்கி பரிவர்த்தனை அட்டையினை தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் ஆகியோர் உடன் உள்ளனர்.