தஞ்சாவூர்.ஆகஸ்ட் 10.
தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பவர்கள் விண்ணப்பிக்க வருகிற 25ஆம் தேதி கடைசி நாளாகும்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் பிடித்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப் பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தஞ்சா வூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் பள்ளி, கல்லூரி, பொது பிரிவு, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர் என ஐந்து பிரிவுகளாக நடைபெறுகிறது .இதில் பள்ளியள வில் 12 வயது முதல் 19 வயதுக்குள் ளும், கல்லூரி அளவில் 17 வயது முதல் 25 வயதுக்குள்ளும், மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பு கிடையாது . பொது பிரிவினர் 15 வயது முதல் 35 வயதுக்குள்ளும், அரசு ஊழியர்கள் மாவட்ட அளவில் பங்கேற்கலாம்.
இந்த போட்டிகளில் அனைத்து பிரிவிலும் வெற்றி பெற்றவர்களு க்கு முதல் பரிசாக ரூபாய் 3 ஆயிரம் இரண்டாவது பரிசாக ரூபாய் 2 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூபாய் ஆயிரமும் ,அவரவர் வங்கி கணக்கில் வழங்கப்படும் .ஒருவர் ஒரு விளையாட்டு விளையாட்டில் மட்டுமே பங்கேற்க வேண்டும் தடகளம் மற்றும் நீச்சல் விளை யாட்டு பிரிவில் ஒருவர் இரண்டு போட்டிகளில் கலந்து கொள்ளலாம் போட்டிகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்
போட்டியில் பங்கேற்க sdat.tn.gov.inஎன்ற இணையதளத் தில் விண்ணப்பிக்க வேண்டும் இதற்கு கடைசி நாள் வருகிற 25ஆம் தேதி மாலை 5 மணி ஆகும் இதில் தடகளம், குண்டு எறிதல், சக்கர நாற்காலி, மேஜைப்பந்து, கிரிக்கெட் ,கபாடி, வாலிபால், கால்பந்து, கேரம், நீச்சல், ஹண்ட் பால், குத்து சண்டை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறு கிறது.
போட்டிகளில் கலந்து கொள்ளும் போது ஆதார் அட்டை நகல், இருப்பி ட சான்றிதழ் ,பள்ளி கல்லூரி சான்றிதழ், பிறப்புசான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தில் முதல் பக்க நகல் ஆகியவைவற்று டன் வரவேண்டும். மேலும் தகவலு க்கு மாவட்ட விளையாட்டு அலுவல க தொலைபேசி எண் 043623563 மற்றும் 7401703496 என்ற எண் ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது