தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா ரூபாய் 7 கோடியில் புதுப்பிக்கப் பட்டது !
அமைச்சர்கள் கே என் நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு!!
தஞ்சாவூர் ஆகஸ்ட் 10.
தஞ்சாவூரில் ரூபாய் 7 கோடியில் புதுப்பிக்கப்பட்ட சிவகங்கை பூங்கா வைஅமைச்சர்கள் கே.என். நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்தனர்.
தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூபாய் 7 கோடி மதிப்பில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பி க்கப்பட்டு வந்தது .இந்த பூங்காவில் சிறுவர்கள் மாற்றுத்திறனாளிகளு க்கான விளையாட்டு உபகரணங் கள் ராஜராஜசோழன் வரலாறு பற்றிய கதை சொல்லும் முற்றம், புல்வெளிகள், மாதிரி அங்கன்வாடி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ள து.
இந்த சிவகங்கை பூங்காவை திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார்.தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகர் (திருவையாறு) டி கே ஜி நீலமேகம் (தஞ்சாவூர்) மாநகரா ட்சி மேயர்கள் சண். ராமநாதன் (தஞ்சாவூர்) சரவணன் ( கும்பகோ ணம்) துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிவகங்கைபூங்காவை திறந்து வைத்து பின்னர் அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா ரூபாய் 7 கோடியில் புதுப்பிக்கப் பட்டு திறக்கப்பட்டுள்ளது .இந்த பூங்கா தஞ்சாவூர் மக்களுக்கு மிகப்பெரிய பொழுது போக்கு இடமாக இருக்கும். சிறுவர்கள் பெரியவர்களுக்கு நீச்சல் குளங்கள் கலையரங்கம் உள்ளிட்டவை உள்ளன .பூங்காவில் இதற்கு முன்பு என்னென்ன இருந்ததோ அவைகள் அனைத்தும் மீண்டும் செய்து தரப் படும் என்றார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி ஆட்சியர் (பயிற்சி ) உத்கர்ஷ்குமார் மாநகராட்சி ஆணையர் கண்ணன் மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி ,மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்து செல்வன் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி மற்றும் மண்டல குழு தலைவர்கள் மாநகராட்சி கவுன்சிலர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்