அரியலூர் மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு “தமிழ் புதல்வன்” திட்டத்தில் மாதம் ரூபாய் 1000/- உதவி தொகை பற்று அட்டை வழங்கி அமைச்சர் தொடங்கி வைத்தார்
அரியலூர்,ஆக:10
அரியலூர் மாவட்டத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை
அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும்
ரூ.1000/- உதவித் தொகை வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தினை
போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்
துவக்கி வைத்து, மாணவர்களுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர், கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி (தமிழ்வழி) மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் “தமிழ்ப் புதல்வன் திட்டத்தை” தொடங்கி வைத்ததை தொடர்ந்து, அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அனிதா அரங்கத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் துவக்கி வைத்து, மாணவர்களுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வறுமை, ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று 2022 ஆம் ஆண்டு அரசு பள்ளி மாணவிகள் பயன்பெறும் வகையில் மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கும் புதுமை பெண் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு அரியலூர் மாவட்டத்தில் 25 கல்லூரிகளில் பயிலும் 2147 மாணவிகள் பயனடைந்து உள்ளனர். அதன் தொடர்ச்சியாக அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழி பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, ரூபாய் 1000 வழங்கும் “தமிழ்ப் புதல்வன்” திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரி துவங்கி வைத்ததை தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து மாணவர்களுக்கு வங்கிப் பற்று அட்டைகளை வழங்கினார்.
இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சுமார் மூன்று லட்ச மாணவர்கள் பயன்பெறும் நிலையில் அரியலூர் மாவட்டத்தில் 20 கல்லூரிகளில் பயிலும் 2704 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இத்தகைய முன்னோடித் திட்டங்களின் மூலம் நமது இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அவர்கள் நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழ்வார்கள். மேலும், மாணவர்கள் உயர் கல்வி இலக்கினை அடையவும், எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளைப் பெற்றிடவும் இயலும்.
அதன்படி கலை மற்றும் அறிவியல், தொழிற்சார் படிப்புகள். இணை மருத்துவம் சார்ந்த படிப்புகள். பட்டயப் படிப்பு. தொழிற்கல்வி மற்றும் ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு (முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும்) போன்ற உயர்கல்வி படிப்புகள் படிக்கும் மாணவர்கள் இத்திட்டத்தின் மூலும் பயன்பெறலாம். மேலும், எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு முடித்து. தொழிற்பயிற்சி பயில்வோரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட இயக்குநர் கவிதா, அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.முத்துகிருஷ்ணன், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், மாவட்ட சமூக நல அலுவலர் அனுராப்பூ நடராஜமணி, முன்னோடி வங்கி மேலாளர் சங்கர சுப்பிரமணியன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) சுவாமி முத்தழகன், வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை) நேசபிரபா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன், உள்ளாட்சி பிரிதிநிகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்