மதுரை ஆகஸ்ட் 9,
மதுரை மாவட்டம் கிழக்கு வட்டம், திருமோகூர் ஏ.பி.வளையாபதி மஹாலில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் அரசு துறைகள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் முகாமை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பொதுமக்கள் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு அதற்கான ஆணைகளை வழங்கினார். மாவட்ட ஊராட்சித்தலைவர் சூரியகலா கலாநிதி, கிழக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை ஆகியோர் உடன் உள்ளனர்.