திருப்பத்தூர்:ஆக:08, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பொம்மிகுப்பம் மற்றும் வெங்களாபுரம் பகுதியில் தமிழக அரசின் புதிய திட்டமான மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் திருப்பத்தூர் தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொம்மிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி வெங்கடேசன், தாதனவலசை ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், ஏ.கே மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலு, ஜம்மணபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசெல்விங ஜெய்சங்கர், காக்கணாம்பாலையம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி சபாபதி, கொடுபாம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சுதா திருநாவுக்கரசு மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதே போல் வெங்களாபுரம் பகுதியில் நடைப்பெற்ற முகாமில்
இதில் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் கந்திலி ஒன்றிய துணை சேர்மன் மோகன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். பின்னர் வருவாய் துறை, கூட்டுறவு துறை, கால்நடை துறை, மின்சார வாரியம், வேளாண்மை துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில்
ஆதியூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார், எலவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன், முத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தகுமார், வெங்களாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா உதயகுமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் 500 -க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு 400 க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.