கன்னியாகுமரி ஆக 5
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் ஆடி அமாவாசையை முன்னிட்டு 04-08-2024 -ம் தேதி நேற்று கன்னியாகுமரி கடற்கரையில் கன்னியாகுமரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தலைமையில் காலை 3 மணி முதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்தும் கன்னியாகுமரி திரிவேணி சங்கத்திற்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர்.
அவர்கள் கடலில் புனித நீராடி, பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து அதன் பின்னர் கடற்கரைக்கு வந்து முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர். இந்நிகழ்வு அதிகாலை முதலே நடைபெற்று வந்தது. திதி தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் மற்றும் வார விடுமுறையை கொண்டாடவும், கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காணவும் வந்த சுற்றுலா பயணிகள் கூட்டம் என லட்சக்கணக்கானோர் கடற்கரையில் திரண்டதால் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க கன்னியாகுமரி உட்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் குற்ற சம்பவங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் தங்கள் பணியை செய்தனர். எனவே
கடற்கரையில் குவிந்த பொதுமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் சிறந்த முறையில் பாதுகாப்பு அளித்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் தங்கள் பாராட்டு தெரிவித்தனர்.