திருப்பத்தூர்:ஆக:5, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட இலக்கி நாயக்கன்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி 48 ஆம் ஆண்டு ஆடி 18 திருவிழாவை திருவிழாவை முன்னிட்டு மாபெரும் இன்னிசை பாட்டு பட்டிமன்றம் நடைபெற்றது.
பல்வேறு கிராமங்கள் ஒன்று சேர்ந்து ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்திற்காக சிறுவிழாவினை சிறப்பிக்கும் விதத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தினர். ஸ்ரீ பாலதண்டாயுதபாணி அருளை பெறுவதற்காக பல்வேறு பக்தர்கள் அந்தரத் தேர், சடல் தேர், காவடி என வேண்டுதல்களை நிறைவேற்றினர். இன்னும் சில பக்தர்கள் இறைவனின் அருளை பெறுவதற்காக தனது மார்பின் மீது மஞ்சளை இடித்து தங்களின் நேர்த்திக் கடன்களை செலுத்தினார்கள். பக்தர்கள் தேர்களை இழுத்து வரும்போது பம்பை உடுக்கை சிலம்பாட்டம் பறையிசை என முழங்க தேர்களை இழுத்து வந்தனர். விழாவானது சிறப்பிக்கும் நோக்கில் மாபெரும் பட்டிமன்றத்தை விழா கமிட்டினர் ஏற்பாடு செய்திருந்தனர். இன்றைய சமுதாயத்தில் திரைப்பட பாடல்கள் மக்களிடையே பக்தி உணர்வை வளர்ப்பது பழைய பாடல்களா? அல்லது புதிய பாடல்களா? எனும் தலைப்பில் விவாத பட்டிமன்ற நிகழ்வு நடைபெற்றது. இந்த பட்டிமன்ற நிகழ்விற்கு நடுவராக தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் ஆதி சௌந்தரராஜன் நடுவராக இருந்தார். பழைய பாடல்களே என்னும் தலைப்பில் இசை புயல் டி எம் எஸ் கண்ணன் நாமக்கல், சொல்லரசி ஆனந்தி எம்.எஸ்.சி.,எம்.எட்., ஊத்தங்கரை, புதிய பாடல்களே என்னும் தலைப்பில் தமிழ்நாடு அரசு விருது பெற்ற சொல்லருவி கலை வளர்மணி செ. ரஜினி எம்.ஏ.,பி.எட்.,எம்.பில்.,பி.எச்.டி., திருப்பத்தூர், நாவரசி லீலாவதி பி.ஏ., ஆகியோர் பங்கேற்று விவாத பட்டிமன்ற நிகழ்வினை சிறப்பித்தனர். இந்த பட்டிமன்ற தலைப்பினை ஒட்டி பழைய பாடல்களை இன்றைய சமுதாயத்தில் பக்தி உணர்வை ஊட்டுகிறது என்று தீர்ப்பு வழங்கினார். இந்த பட்டிமன்ற நிகழ்வினை பொதுமக்கள் இளைஞர்கள் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், பக்தர்கள் , சமூக ஆர்வலர்கள் என பலரும் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும் இந்த திருவிழாவில் 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தங்களது நேர்த்திக்கடன் மற்றும் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி அருள் பெற்று சென்றனர்.