தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த கிறிஸ்டியாநகரம் T.D.T.A. மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை உடன்குடி ஒன்றிய குழுத் தலைவர் பாலசிங் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
முகாமில் கண் பரிசோதனை தோல் நோய் சிகிச்சை எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம் ரத்த பரிசோதனை சிறுநீரக பரிசோதனை புற்றுநோய் பரிசோதனை கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிவின் உடன்குடி பேரூர் திமுக செயலாளரும், பேரூராட்சி துணைத்தலைவருமன மால் ராஜேஷ், பேரூராட்சி கவுன்சிலர் மும்தாஜ் சலீம், உடன்குடி கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் ஷேக் முகமது, மாவட்ட திமுக பிரதிநிதி ஹீபர் மோசஸ், முன்னாள் கவுன்சிலர்கள் சலீம் அனிவர் சலீம், ஹரி கிருஷ்ணன் கணேசன் உடன்குடி ஒன்றிய மேற்கு துணைச் செயலாளர் சுடலைக்கண் நாராயணன் ஆட்டோ கணேசன் குங்பு சங்கநாராயணன், கண்ணன் மற்றும் அரசு மருத்துவர்கள் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.