ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆக:4
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகம்,
பயோமெடிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறை, மேற்கு வங்க , வித்யாசாகர் பல்கலைக்கழக,மனித உடலியல் உயிரியல் மருத்துவ ஆய்வகம் மற்றும் மேலாண்மை மற்றும் விலங்கியல் துறைகளுடன் இணைந்து “அல்சைமர் நோய் சிகிச்சை மற்றும் ஆரம்பகால சிகிச்சையின் மூலம் முன்னேற்றங்கள்” என்ற தலைப்பில் எஸ்இஆர்பி நிதியுதவியுடன் சர்வதேச மாநாட்டு.
பல்கலை வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
துணைவேந்தர் முனைவர் எஸ். நாராயணன், பதிவாளர் முனவைர் வி.வாசுதேவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குனர் முனவைர் எம்.பள்ளிகொண்டா ராஜசேகரன் வரவேற்று பேசினார்.
பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறை தலைவர் முனைவர் டி. அருண்பிரசாத், மாநாட்டின் இரண்டு நாள் நிகழ்ச்சிகளை விவரித்தார்.
பேராசிரியர்கள் சக்திவேல் மற்றும் என்.பாண்டிய ராஜ் பேச்சாளர்களை அறிமுகப்படுத்தினர்.
தலைமை விருந்தினர், மலேசியா , மல்டிமீடியா பல்கலை,டாக்டர் வோங் வை கிட், மாநாட்டை துவக்கி வைத்தார்.
அல்சைமர் நோய் சிகிச்சைக்காக, எஐ, டிஎஸ், எம்எல், மற்றும் சைபர் தொழில்நுட்பம் ஆகியவை தரவு சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் மருந்துகளில் முடிவெடுப்பதில் ஈடுபட்டுள்ளன என்று தலைமை விருந்தினர் உரையாற்றி “மாநாட்டு ஆராய்ச்சி கட்டுரை மலரை” வெளியிட்டார்.
ஓமன், தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் டாக்டர். பி. சுந்தரவடிவழகன், அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அல்சைமர் நோய் ஆரம்ப சிகிச்சையில் அவற்றின் பயன்பாடுகள் பற்றி சிறப்புரை வழங்கினார்.
ஓமன், தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழக , ஆராய்ச்சியாளர் ,டாக்டர் கிருஷ்ண பிரியா,
ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி,அமெரிக்கா ,டாக்டர். பந்தனா சிங், மற்றும் 150 பிரதிநிதிகள் , உலகம் முழுவதும் பங்கேற்று 200 கட்டுரைகள் மாநாட்டிற்குப் பெறப்பட்டன.
இரண்டாம் நாள் நிறைவு விழாவில், டீன் முனைவர் பி.சிவக்குமார் வரவேற்றார்.
புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக லைஃப் சயின்சஸ் பள்ளி , பேராசிரியர் அமல் சந்திர மோண்டல், அல்சைமர் சிகிச்சை துறையில் தொடர்ச்சியான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு
களின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார்.
மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.
துறை தலைவர் ஏ. முத்துக்குமார் நன்றியுரை வழங்கினார்.