ஊத்தங்கரையில் தீரன் சின்னமலை அவர்களின் 219 ஆம் ஆண்டு வீரவணக்கம் நிகழ்ச்சி.
அமைச்சர்.செஞ்சி மஸ்தான் பங்கேற்பு.
ஊத்தங்கரையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் தீரன் சின்னமலை அவர்களின் 219 ஆம் ஆண்டு வீரவணக்கம் நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் தீரன் சின்னமலை அவர்களின் 219 ஆம் ஆண்டு வீரவணக்கம் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் வஜ்ரவேல் தலைமையில் ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய செயலாளர் சரவணன் முன்னிலையில் நடந்தது.
இதில் ஊத்தங்கரை மூன்றம்பட்டி கிராமத்திற்கு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர். செஞ்சி மஸ்தான் தீரன் சின்னமலை அவர்களின் 219 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினார்.
இதில் மாவட்ட கொங்கு பேரவை தலைவர் இளையராஜா, மாவட்ட துணை தலைவர் தண்டபாணி, கிழக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், மேற்கு ஒன்றிய பொருளாளர் செந்தில்குமார், வடக்கு ஒன்றிய பொருளாளர் சதீஷ்குமார், நகர செயலாளர் வெங்கடேசன்,நகர பொருளாளர் கிருஷ்ணகுமார், இளைஞர் அணி பொறுப்பாளர்கள் சந்தோஷ்குமார்,ஆதி, மாணவ இளைஞர் அணி குமரேசன், அரசு போக்குவரத்து கழகம் தீரன் தொழில் சங்க செயளாலர் முரளி, மாவட்ட பிரதிநிதி ராமன், வர்த்தக அணி செயளாலர் கவியரசு உள்ளிட்ட கொங்கு நாட்டு மக்கள் தேசிய கட்சி மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினர்.